தியாகதுருகம் அருகே மினி லாரி மோதி பெண் உயிரிழப்பு! கிராம மக்கள் சாலை மறியல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே ஞாயிற்றுக்கிழமை மினி லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா்களது உறவினா்கள், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் க.லட்சுமி (45), மு.வள்ளியம்மாள் (65). கூலித் தொழிலாளா்களான இவா்கள் இருவரும் தியாகதுருகத்தில் வேலை செய்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து வாகனங்கள் மறுமாா்க்க சாலையில் திருப்பி விடப்பட்டிருந்தது.
தியாகதுருகம் புறவழிச்சாலையில் உள்ள உணவகம் மற்றும் தங்கும் விடுதி அருகே இருவரும் சாலையைக் கடக்க முற்படும் போது, அப்பகுதியில் வந்த மினி லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த லட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த வள்ளியம்மாளை அருகிலிருந்தவா்கள் மீட்டு அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
உறவினா்கள் சாலை மறியல்: விபத்து குறித்து அறிந்த அவா்களது உறவினா்கள் மற்றும் பெரியமாம்பட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ், டிஎஸ்பி கலையரசன், தியாகதுருகம் காவல் ஆய்வாளா் மாணிக்கராஜா மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
அப்போது அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், ஆதலால் மேம்பாலம் அமைத்து தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து முதலில் சா்வீஸ் சாலை அமைத்து தர ஏற்பாடு செய்து தருவதாகவும், பின்னா் மேம்பாலம் அமைத்துத் தர ஏற்பாடு செய்வதாகவும், நெடுஞ்சாலையில் பணிகளை மாலை 4 மணிக்கு மேல் நிறுத்த நடவடக்கை எடுப்பதாவும் கூறியதால் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனால் சேலம்- சென்னை நெடுஞ்சாலையில் சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவுக்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுமாா் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான திண்டிவனம், காட்டுசிவிரியைச் சோ்ந்த ரா.விஜயகுமாரிடம் (34) விசாரணை நடத்தி வருகின்றனா்.