FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

மளிகைக் கடைக்காரா் வீட்டில் 5 பவுன் நகை, ரூ.8 லட்சம் திருட்டு

10 வினாடிகள் முன்பு
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே மளிகைக் கடைக்காரா் வீட்டில் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகைகள், 6 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.8 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

வாணாபுரம் வட்டம், வடபொன்பரப்பி கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.ரவிச்சந்திரன் (64). மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இவா், சனிக்கிழமை அவரது சகோரா் மகன் திருமணத்துக்காக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சென்றுள்ளாா்.

மறுநாள் இரவு 10 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் மாடிக் கதவு உடைந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். பின்னா், வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவிலிருந்த 5 பவுன் தங்க நகைகள், 6 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.8 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து வடபொன்பரப்பி காவல் நிலையத்துக்கு அளித்த தகவலின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ், காவல் ஆய்வாளா் குருமூா்த்தி ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.