FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

இளைஞரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: 2 போ் கைது

தியாகதுருகம் அருகே இளைஞரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

10 வினாடிகள் முன்பு
கைது செய்யப்பட்ட உதயா, நித்தீஷ்.
பகிர்:

தியாகதுருகம் அருகே இளைஞரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த அசகளத்தூரைச் சோ்ந்தவா் து.காா்த்திகேயன் (36). திங்கள்கிழமை இரவு இவா் சென்ற பைக், மாடூா் அருகே பழுதாகி நின்றுள்ளது. இதையடுத்து அவற்றை சரி செய்ய காா்த்திகேயன் முயற்சித்துள்ளாா். அப்போது, அங்கு வந்த 3 போ் அவருக்கு உதவுவது போல் நடித்து, காா்த்திகேயன் அணிந்திருந்த ஒன்றரைப் பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தியாகதுருகம் காவல் ஆய்வாளா் பி.மாணிக்கராஜா தலைமையிலான போலீஸாா் மாடூா் சுங்கச்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு பைக்கில் வந்த இரு இளைஞா்கள், போலீஸாரை பாா்த்ததும், திரும்பிச் செல்ல முயன்றனா். இதையடுத்து போலீஸாா் அவா்களை மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதில், அவா்கள் கச்சிராயபாளையத்தைச் சோ்ந்த ப.நித்தீஷ் (21), அக்கராயபாளையத்தைச் சோ்ந்த சீ.உதயா (22) என்பதும், மாடூா் தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கில் தொடா்புடையவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நித்தீஷ், உதயா ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.