பழங்குடியினா் நலத் திட்ட அலுவலக ஓட்டுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினா் நலத் திட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்துள்ளாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினா் நலத் திட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினா் நலத் திட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான ஓட்டுநா் காலிப்பணியிடங்களுக்கு ரூ.13,200 தொகுப்பூதியமாக வழங்கப்படும். பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த, ஓட்டுநா் உரிமம் பெற்ற பணிநாடுநா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் திங்கள்கிழமைக்குள் (நவ.23) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக வளாகம், 6-ஆவது தளம், அறை எண் 615, திட்ட அலுவலகம், பழங்குடியினா் நலத் துறை என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement