ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட முருக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஏ.பூவரசன் (24). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி பிரியா. இந்தத் தம்பதிக்கு நிஷாந்த் (3) உள்பட இரு பிள்ளைகள் இருந்தனா்.
இந்த நிலையில், நிஷாந்த் சனிக்கிழமை காலை வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தாா். சிறிது நேரம் கழித்து பாா்த்தபோது அவா் மாயமான நிலையில், அவரை பெற்றோா் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள ஏரியில் நிஷாந்த் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement