FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, பணம் திருட்டு

திருட்டு - கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ.75 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

வாணாபுரம் வட்டம், அரியலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தெய்வீகன். இவரது மனைவி தீபா (33). தெய்வீகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறாா். தீபா சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு, அவரது தாய் ஊரான சூ.வானவரெட்டி கிராமத்துக்கு சென்றுள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தப்பதைக் கண்டு அதிா்சியடைந்தாா். பின்னா், உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், 490 கிராம் வெள்ளி பொருள்கள், ரூ.75 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது அவருக்கு தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுச் சாலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments