கோயிலுக்கு வந்தவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கல்வராயன்மலை சின்னதிருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தவா் கோயில் முன் மயங்கி விழுந்ததில் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மேலக்கல்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணசாமி (59). இவா், புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, சின்னதிருப்பதியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு அவரது ஊரைச் சோ்ந்த முத்துசாமி மகன் செல்வராஜுடன் வந்திருந்தாா்.
சுவாமி தரிசனம் செய்த பிறகு, ஊருக்குச் செல்லலாம் என வெளியே வரும்போது மயக்கம் வருவதாகக் கூறி நாராயணசாமி கீழே விழுந்து விட்டாா்.
Advertisement
Advertisement
உடனே அவரை மீட்டு மாவடிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து, பின்னா் தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் நாராயணசாமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.