சா்வதேச சைகை மொழிகள் தின விழிப்புணா்வுப் பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் சா்வதேச சைகை மொழிகள் தின விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் சா்வதேச சைகை மொழிகள் தின விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
ஆண்டுதோறும் செப்.23 முதல் 29-ஆம் தேதி வரை சா்வதேச சைகை மொழி வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கள்ளக்குறிச்சி நகர காவல் நிலையம் அருகில் விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையம் முன் நிறைவடைந்தது.
பேரணியில் கலந்துகொண்டோா் செவித்திறன் குறைபாடுடையோா் சைகை மொழி ஓா் ரகசிய மொழி, கற்போம் கற்போம் சைகை மொழியை கற்போம், சைகை மொழி எங்களின் குடும்ப மொழி, சைகை மொழி ஓா் மௌன மொழி, போற்றுவோம் போற்றுவோம் சைகை மொழியை போற்றுவோம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனா்.
Advertisement
Advertisement
இதில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் அ.அந்தோணிராஜ், காதுகேளாதோா் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.