தொடங்கிய 8 நிமிடங்களிலேயே முடிவுற்ற புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம்
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கிய 8 நிமிடங்களிலேயே முடிவுற்றது.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கிய 8 நிமிடங்களிலேயே முடிவுற்றது.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை கூடும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பேரவைத் தலைவர் வ.சபாபதி தலைமையில் கூட்டம் கூடியது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், முன்னாள் அமைச்சர் எஸ்.தட்சிணாமூர்த்தி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரவைத் தலைவர் சபாபதி குறிப்பு வாசித்தார்.
பின்னர் மின் துறை அமைச்சர் தி.தியாகராஜன் கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணைய அறிவிக்கைகளை வாசித்தார்.
Advertisement
Advertisement
அப்போது அதிமுக துணைத் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுந்து, இலங்கைத் தமிழர் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அளித்த கடிதம் என்ன ஆயிற்று எனக் கேள்வி எழுப்பினார்.
அரசுக் கொறடா பதவியில் இருந்து ராஜிநாமா செய்த என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர் ஜி.நேரு எழுந்து, பேரவையை 10 நாள்கள் தொடர்ந்து நடத்த வேண்டும் என நான் அளித்த கடிதம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பேரவைத் தலைவர் சபாபதி பதிலளிக்கையில், நீங்கள் எங்கு வந்து கடிதம் அளித்தீர்களோ அங்கேயே வந்து கேளுங்கள், பதில் தரப்படும். பேரவையை எத்தனை நாள்கள் கூட்டுவது என்பது பற்றி அலுவல் ஆய்வுக் குழுதான் முடிவு செய்யும் எனக் கூறி பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாகக் கூறிவிட்டுச் சென்று விட்டார்.
இதனால் பேரவைக் கூட்டம் தொடங்கிய 8 நிமிடங்களில் முடிவுற்றது. ஏற்கெனவே ஜானகிராமன் தலைமையிலான திமுக ஆட்சியின் போது பேரவைக் கூட்டம் கூட்டப்பட்டு 2 நிமிடங்களில் முடிவுற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.