FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா

புதுச்சேரி நகைச்சுவை மன்றம் சார்பில் நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

புதுச்சேரி நகைச்சுவை மன்றம் சார்பில் நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

 புதுச்சேரி அரசின் கல்வித் துறையின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற குலசேகரன் மற்றும் சென்னை தமிழ் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆசிரிய செம்மல் விருது பெற்ற செந்தில் குமார் இருவருக்கும் புதுச்சேரி நகைச்சுவை மன்றத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

 எல்லைப்பிளைச்சாவடி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அல்லிமுத்து வரவேற்றார். மன்றத் தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். வட்ட ஆய்வாளர் சுரேஷ், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் சேஷாத்திரி, நகைச்சுவை மன்ற செயலர் பூபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Advertisement

Advertisement

 உள்ளாட்சித் துறை அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டிப் பேசினார். ஆசிரியர்கள் ஜெயப்பிரகாஷ், பாரதிராஜா பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments