பழங்குடியினர் நலச் சங்கக் கூட்டம்
புதுவை இந்திரா நகர் தொகுதி பழங்குடியினர் நலச் சங்க நிர்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுவை இந்திரா நகர் தொகுதி பழங்குடியினர் நலச் சங்க நிர்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு புதுவை மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.ராம்குமார் தலைமை வகித்தார். காரைக்கால் மாவட்ட பழங்குடி முன்னேற்றச் சங்கத் தலைவர் மனோகர் முன்னிலை வகித்தார். இந்திரா நகர் தொகுதி பழங்குடிநல சங்கத் தலைவர் சி.சுப்பராயலு, துணைத் தலைவர் நாகராஜ், செயலர் முத்தையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுவை பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தங்களை மத்திய அரசின் அட்டவணை பழங்குடியின பட்டியலில் சேர்க்க, மத்திய, மாநில அரசு வீண் காலதாமதம் செய்து வருகிறது. இது குறித்து மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று புதுவை மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களை கேட்டுக் கொள்வதென்று இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.