மன்னர் மன்னன் புகழ் விழா கவியரங்கம்: ஆக. 8-க்குள் கவிதைகளை அனுப்பலாம்
எழுத்தாளர் மன்னர்மன்னனின் பொது வாழ்க்கை புகழ் விழாவையொட்டி நடைபெறும் கவியரங்கில் பங்கேற்க விரும்புவோர் ஆக. 8-ஆம் தேதிக்குள் கவிதைகளை அனுப்ப வேண்டும் என்று
எழுத்தாளர் மன்னர்மன்னனின் பொது வாழ்க்கை புகழ் விழாவையொட்டி நடைபெறும் கவியரங்கில் பங்கேற்க விரும்புவோர் ஆக. 8-ஆம் தேதிக்குள் கவிதைகளை அனுப்ப வேண்டும் என்று பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அறக்கட்டளையின் தலைவர் கவிஞர் கோ.பாரதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, புகழ் விழா நடைபெற உள்ளது.
இதையொட்டி "மனம் கவரும் மன்னர்மன்னன்' என்னும் தலைப்பில் கவியரங்கம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி காலை 10.15 முதல் மாலை 5 வரை நடைபெறவுள்ளது.
இதற்கான விழா புதுச்சேரி பெருமாள் கோயில் தெருவில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும். விழாவுக்கு கலைமாமணி கோ.பாரதி தலைமை வகிக்கிறார். தமிழ்மாமணி மன்னர்மன்னன் கவியரங்கத்துக்கு தலைமை வகிக்கிறார்.
திரைப்படப் பாடலாசிரியரும், முன்னாள் அரசவைக் கவிஞருமான முத்துலிங்கம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
இதற்காக கவிதை எழுதி அனுப்போர் 24 வரிகளுக்கு மிகாமல் எழுதி, ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுவோர் தங்களது கவிதைகளை கவியரங்கத்தில் 6 வரிகளை வாசிக்கலாம். தேர்வு செய்யப்படும் கவிஞர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
கவிதைகளை "கோ.பாரதி, தலைவர், பாரதிதாசன் அறக்கட்டளை, எண்: 4 முதல் தெரு, காந்தி நகர், புதுச்சேரி-605009.' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.