ஆகஸ்ட் 9 மின் தடை - புதுச்சேரி
வில்லியனூர் தானியங்கி துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால்,துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட
வில்லியனூர் தானியங்கி துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால்,துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.9) காலை 8 முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் தடைசெய்யப்படுகிறது.
ஜிப்மர் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சோனியா காந்தி நகர், ராஜா அண்ணாமலை நகர், புஷ்பா நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைபடும்.
லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை லாஸ்பேட்டை மின்பாதைக்கு உள்பட்ட இடங்களில் மின் தடை ஏற்படும். அதுபோல, மூலக்குளம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை மூலக்குளம் மின்பாதைக்கு உள்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடைசெய்யப்படுகிறது.
கருவடிக்குப்பம் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், வியாழக்கிழமை காலை 9 முதல் பிர்பகல் 2 மணி வரை கருவடிக்குப்பம் மின்பாதையில் வரும் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் தடை செய்யப்படுகிறது என்று புதுச்சேரி கிராமப்புற (வடக்கு) மின்துறை செயற்பொறியாளர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி-வில்லியனூர் உயர் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புதுச்சேரி நகரம் முழுவதும் வியாழக்கிழமை காலை 8 முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் தடைபடும் என்று புதுச்சேரி மின்துறை செயற்பொறியாளர் ஜி.கனியமுதன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.