அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிர்வாகிகள் ஏழமலை, பூபாலன் ஆகியோர் தலைமை வகித்தனர். ராஜகோபால், இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், பணிக்கொடை உச்சவரம்பு ரூ. ஒரு லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.