FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வில்லியனூரில் சட்ட சேவைகள் சிறப்பு முகாம்

புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைந்து நடத்திய 5 - ஆவது சட்ட சேவைகள் சிறப்பு முகாம் வில்லியனூரில் அண்மையில் நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைந்து நடத்திய 5 - ஆவது சட்ட சேவைகள் சிறப்பு முகாம் வில்லியனூரில் அண்மையில் நடைபெற்றது.
இந்த முகாம் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவரும், உச்சநீதிமன்ற நீதிபதியுமான மதன் பீமாராவ் லோகூர் உத்தரவின்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவருமான மணிக்குமார் வழிகாட்டுதலின் படி,  வில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. 
காலை முதல் மாலை வரை நடைபெற்ற முகாமில் வில்லியனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள் 851 பேர் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். பல்வேறு அதிகாரிகள் தங்கள் துறையால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்துப் பேசினர்.  முகாமில் புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனா தேவி மற்றும் சட்டப்பணிகள் ஆணையத்தின் பட்டியல் வழக்குரைஞர்கள், ஆணைய அலுவலர்கள், சட்டத் தன்னார்வலர்கள், அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments