FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் தினத்தைப் புறக்கணித்து, புதுச்சேரியில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

ஆசிரியர் தினத்தைப் புறக்கணித்து, புதுச்சேரியில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 புதுவையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
 மேலும், அரசு ஆசிரியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது போல, 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை தங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர், இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 இந்த நிலையில், ஆசிரியர் தினமான புதன்கிழமை புதுச்சேரி புனித தான்ழ் வீதியில் உள்ள பேராயர் இல்லம் அருகே கருப்புப் பட்டை அணிந்து ஆசிரியர் தின புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆல்பர்ட் மார்ட்டின், அந்தோனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 அரசு ஊழியர் கூட்டமைப்பின் கெüரவத் தலைவர் சேஷாச்சலம் சிறப்புரையாற்றினார்.
 ஓய்வூதியதாரர்கள் சங்கத் தலைவர் ஸ்டாலின், சீதாலட்சுமி, தாஸ், வின்சென்ட், தேவிகா, ஜோசப் பிரிட்டோ, பெர்டரிக், அருள்ராஜ், அகஸ்டின் உள்பட அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments