FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காவலர் பணிக்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும்

காவலர் பணிக்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

காவலர் பணிக்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு அவர் அனுப்பிய மனு:
புதுவை அரசின் காவல் துறை, 390 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க, வயது வரம்பு, 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், புதுச்சேரியில் வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது. அதைவிட அரசு வேலைவாய்ப்பு என்பது மிகவும் குறைவு.
எனவே, காவலர் பணிக்கான வயது உச்ச வரம்பை அதிகரிக்க ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ஓம்சக்தி சேகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments