முகப்பு
புதுச்சேரி

கார்கில் வெற்றி தினம்: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மரியாதை

புதுச்சேரியில் கார்கில் வெற்றி தின விழாவில், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி  கலந்துகொண்டு, கார்கில் போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:53 AM
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை நடந்த கார்கில் வெற்றி தின விழாவில், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு, கார்கில் போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

கடந்த 1999-ஆம் ஆண்டு, பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது.  இந்த போரில் பங்கேற்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த வகையில், செவ்வாய்க்கிழமை புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் நடைபெற்ற கார்கில் வெற்றி தின விழாவில், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு, கார்கில் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

அவர்களைத் தொடர்ந்து, சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கலந்துகொண்டு கார்கில் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →