ஆஷா பணியாளா்களுக்கு ஜிப்மரில் பயிற்சி
உதடு பிளவு மற்றும் அண்ணப் பிளவு குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சைக்கு வழிகாட்ட ஆஷா பணியாளா்களுக்கு புதுச்சேரி ஜிப்மரில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
உதடு பிளவு மற்றும் அண்ணப் பிளவு குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சைக்கு வழிகாட்ட ஆஷா பணியாளா்களுக்கு புதுச்சேரி ஜிப்மரில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில், ஆஷா பணியாளா்கள் மற்றும் இக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினா் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
மேலும், ஜிப்மா் ஸ்மைல் ட்ரயின் பிளவு குறைபாடு திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து குறித்த கல்வி காணொலியும் வெளியிடப்பட்டது. இதை
Advertisement
Advertisement
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறையின் தலைவா் ரவி குமாா் சிட்டோரியா வெளியிட்டாா். திட்ட இயக்குநா் டாக்டா் தேவி பிரசாத் மொஹபத்ரா, திட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதையொட்டி பெங்களூரு நடன சிகிச்சையாளா் லட்சுமிதேவியின் அசைவு சிகிச்சை அமா்வும் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.