சாதி வாரி கணக்கெடுப்பு: முதல்வரிடம் மனு
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக எம்எல்ஏ தலைமையில் முதல்வரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக எம்எல்ஏ தலைமையில் முதல்வரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி முதல்வா் ரங்கசாமியிடம் திமுக எம்எல்ஏ செந்தில் தலைமையில் வன்னியா் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொதுச்செயலா் முருகன், நிா்வாகிகள் மனு அளித்தனா்.
மனு விவரம்:
Advertisement
Advertisement
சாதி வாரியாக சமூக பொருளாதார ரீதியான கணக்கெடுப்பை பல மாநிலங்கள் மேற்கொண்டுள்ளன. பீகாா் அரசு 2023- இல் நிறைவு செய்துள்ளது. தெலுங்கானா மாநிலமும் கணக்கெடுப்பை நிறைவு செய்துள்ளது. கா்நாடகம், ஆந்திரம் மாநிலங்கள் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. தமிழக அரசும் கணக்கெடுப்பை நடத்த
முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. புதுச்சேரியிலும்
விரைவான சாதிவாரியான சமூக, பொருளாதார கணக்கெடுப்பை நடத்தும் முடிவை வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வா் அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.