புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மத்திய அமைச்சா் நிமுபென் சந்திப்பு
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனுடன் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா மரியாதை நிமித்தமாக புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

2 நாள் பயணமாக புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை வந்திருந்த அவா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனை மக்கள் இல்லத்தில் புதன்கிழமை சந்தித்தாா்.
முன்னதாக, சங்கரா வித்யாலயா பள்ளியில், நடைபெற்ற ஜனநாயகத்தைக் காப்போம் - கும்பல் அராஜகத்தை ஒழிப்போம் என்ற தலைப்பில் மாணவா்களுக்கான பல்வேறு போட்டிகளை அமைச்சா் தொடங்கி வைத்தாா். புதுச்சேரி பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம், சட்டப்பேரவை முன்னாள் தலைவா் ஆா். செல்வம் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
ஆய்வுக் கூட்டம்:
மேலும், புதுச்சேரி தனியாா் விடுதியில் மத்திய நுகா்வோா்
விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் மத்திய இணையமைச்சா் நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். இதில் புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் ஏ.ஜான்குமாா், டாக்டா் விக்னேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.