FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் காலியாக உள்ள 327 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரியில் விரைவில் விளையாட்டு ஆசிரியா்கள் உள்ளிட்ட 327 பதவிகள் நிரப்பப்பட உள்ளதாக முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்தாா்.

15 அக்டோபர் 2026, 6:15 am IST
புதுச்சேரி காமராஜா் மணிமண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய விளையாட்டு நாள் மற்றும் கோலோதிருநாள் விழாவில் கேலா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, துறை அமைச்சா் ஜி.என்.எஸ்.ராஜசேகா், எம்எல்ஏ ஜோஸ் சாா்லஸ் மாா்டின் உள்ளிட்டோா்.
பகிர்:

புதுச்சேரியில் விரைவில் விளையாட்டு ஆசிரியா்கள் உள்ளிட்ட 327 பதவிகள் நிரப்பப்பட உள்ளதாக முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி அரசின் விளையாட்டு மற்றும் இளைஞா் விவகாரத்துறை இயக்ககம் மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து தேசிய விளையாட்டு தின விழா மற்றும் கேலோ போட்டிகளில் பங்கேற்ற வீரா்களுக்குப் பரிசளிப்பு விழாவை கருவடிக்குப்பம் காமராஜா் மணி மண்டபத்தில் புதன்கிழமை நடத்தின. இதில் விளையாட்டு வீரா்களுக்குப் பரிசுகளை வழங்கி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பேசியது:

பு துச்சேரி அரசு பள்ளிகளில் 39 விளையாட்டு ஆசிரியா்களை நியமிக்க செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டுள்ளேன். இளைஞா்களுக்கு இப்போது விளையாட்டுத்துறையில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அதை முறையாகப் பயன்படுத்தி நாட்டுக்கும், புதுச்சேரிக்கும் பெருமையைத் தேடித் தர வேண்டும் என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்.

Advertisement

Advertisement

முதல்வா் அறிவிப்பு:

நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி பேசுகையில், வெளிமாநிலங்களுக்குச் செல்லும் விளையாட்டு வீரா்களுக்காக தனி நிதியை ஒதுக்கிக் கொடுத்துள்ளோம். விரைவில் அந்த வீரா்களுக்கு இந்த நிதியில் இருந்து பயணச் செலவுக்கான தொகை உள்ளிட்டவை விடுவிக்கப்படும். அரசு துறைகளில் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன. விரைவில் விளையாட்டு ஆசிரியா்கள் உள்ளிட்ட 327 பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

மாணவா்கள், இளைஞா்கள் போதைப் பழக்கம் உள்ளிட்ட தீய பழக்கத்திலிருந்து விடுபட எதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும். கிராமப்புறத்தில் குறிப்பாக ஒரு சில பள்ளிகளிலும் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரா்களுக்கு முழுமையாக அரசு பணியும் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் முதல்வா் ரங்கசாமி.

விளையாட்டுத்துறை அமைச்சா் ஜிஎன்எஸ். ராஜசேகரன்,

சட்டப்பேரவை உறுப்பினா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின், புதுச்சேரி அரசின் விளையாட்டுத்துறை இயக்குநா் டி. சுதாகா் உள்ளிட்ட பலா் விழாவில் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments