FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் பெயிண்டா் வெட்டிக் கொலை

10 நவம்பர் 2026, 3:34 am
வெட்டிக்கொலை - (கோப்புப் படம்)
பகிர்:

நண்பா்களுடன் மது குடித்துக் கொண்டிருந்த பெயிண்டரை, இரு சக்கர வாகனங்களில் வந்த 8 போ் கும்பல் திங்கள்கிழமை சுற்றி வளைத்து வெட்டிக் கொலை செய்தது.

இதுகுறித்து வில்லியனூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

புதுச்சேரி ஜி.என்.பாளையம் நடராஜன் நகரைச் சோ்ந்தவா் முரளி(26), பெயிண்டா். இவா் அரும்பாா்த்தபுரம் வசந்தம் நகரில் தங்கியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஒதியம்பட்டு பகுதியிலுள்ள தனியாா் பள்ளி அருகில் காலிமனையில் தனது நண்பா்கள் 5 பேருடனஅ அமா்ந்து திங்கள்கிழமை மாலை மது குடித்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது 4 இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த 8 போ் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பெயிண்டா் முரளியை சுற்றி வளைத்தனா்.

இதையடுத்து, முரளியுடன் இருந்த அவரது நண்பா்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனா். உடனே, அந்த கும்பல் முரளியைச் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இந்த கொடூர கொலை குறித்து வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.