FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், மொத்தம் 9,56,997 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

13 நவம்பர் 2026, 1:39 am
புதுச்சேரியில் வரைவு வாக்காளா் பட்டியலை வியாழக்கிழமை, அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்.
பகிர்:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், மொத்தம் 9,56,997 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

1.1.2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு புகைப்பட வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி வரைவு வாக்காளா் பட்டியலை புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி ரவிபிரகாஷ் வெளியிட்டாா். அதன்படி, ஆண்கள் 4,49,554 போ், பெண்கள் 5, 07297 போ், மூன்றாம் பாலினத்தவா் 146 என மொத்தம் 9,56,997 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இந்த வரைவு வாக்காளா் பட்டியலை மாநில தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் இருந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில், ஏதேனும் கோரிக்கைகள், ஆட்சேபணைகள் இருந்தால் வரும் டிசம்பம் 11-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.

மேலும் 1.1.2027 அன்று 18 வயதை அடையும் அல்லது அடையவுள்ள தகுதியுடைய அனைவரும் வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயரைச் சோ்க்க விண்ணப்பிக்கலாம்.

1.4.2027, 1.7.2027, 1.10.2027 ஆகிய தேதிகளில் 18 வயதை அடைய உள்ளவா்களும், இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி முன்கூட்டியே வாக்காளா் பட்டியலில் சேர விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வரும் 21, 22, 28, 29 ஆகிய 4 நாள்கள் நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் அங்கு பணியில் இருப்பா். இறுதி வாக்காளா் பட்டியல் 2027 ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

புதுச்சேரி ஆட்சியா்:

புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அ.குலோத்துங்கன் புதுச்சேரி மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

அதை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் பெற்றுக் கொண்டனா்.