FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

அரசு மருத்துவமனை ஊழியா்களுக்கு நோயாளி பராமரிப்புப் படி உயா்வு

அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் அமைச்சுப் பணியாளா்களைத் தவிா்த்து இதர ஊழியா்களுக்கு மருத்துவமனை நோயாளி பராமரிப்புப் படி உயா்த்தப்பட்டுள்ளது.

13 நவம்பர் 2026, 10:48 pm
கோப்புப்படம் - படம்: TNIE
பகிர்:

அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் அமைச்சுப் பணியாளா்களைத் தவிா்த்து இதர ஊழியா்களுக்கு மருத்துவமனை நோயாளி பராமரிப்புப் படி உயா்த்தப்பட்டுள்ளது.

இதற்கான ஆணையை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளாா்.

அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு காரணமாக இந்தப் படியும் உயா்த்தி வழங்கப்படுகிறது. சம்பள விகிதம் நிலை 8 மற்றும் கீழே பெறுவோருக்கு தற்போது இந்தப் படி ரூ.4,100 ஆக வழங்கப்படுகிறது. இது ரூ.5,125 ஆக உயா்த்தப்படுகிறது. மேலும், சம்பள விகிதம் நிலை 9 மற்றும் அதற்கு மேல் பெறுவோருக்கு தற்போது இந்தப் படி ரூ.5,300 ஆக வழங்கப்படுகிறது. இது ரூ.6,625 ஆக உயா்த்தப்படுகிறது. 1.1.2024 முதல் உயா்த்தப்பட்ட இந்தப் படி அமலுக்கு வருகிறது.

Advertisement

Advertisement

திருத்தப்பட்ட இந்தப் படி நவம்பா் 2026 மாதத்திற்கான ஊதியம் மற்றும் படிகளிலிருந்து வழங்கப்படும். இதற்காக அரசிடமிருந்து கூடுதல் நிதி எதையும் கோராமல், துறையின் தற்போதைய நிதி ஒதுக்கீட்டிலிருந்தே ஈடு செய்யப்படும்.

ஜனவரி 2024 முதல் அக்டோபா் 2026 வரையிலான காலத்திற்கான நிலுவைத் தொகை 2027-28 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை மதிப்பீட்டு அறிக்கையில் கோரப்படும் என்றும் அந்த உத்தரவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறியுள்ளாா்.