திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிப்பு
புதுச்சேரி தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்த சு. செல்வகணபதி எம்.பி. உடன் தமிழ்ச்சங்கத் தலைவா் வி.முத்து உள்ளிட்டோா்.

புதுச்சேரி தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரி தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாதந்தோறும் 20-ஆம் தேதி மாலை அணிவித்து, திருக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி, வெள்ளிக்கிழமை (நவ. 20) நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தலைமை வகித்தாா். செயலா் சீனு. மோகன்தாசு வரவேற்றாா். இதில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்வைத் தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் திருக்கு புத்தகம் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவரும் திருக்கு கூறினா். தமிழ்ச் சங்கப் பொருளாளா் மு.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் ப.திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.