முகப்பு
புதுச்சேரி

ஏனாமில் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் புயல் நிவாரண நிதி! அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்!

54 வினாடிகள் முன்பு
ஏனாமில் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் புயல் நிவாரண நிதி!
அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்!
ஒர்னாப் புயல் - கோப்புப் படம்
பகிர்:

அா்னாப் புயல் பாதிப்பு நிவாரணமாக ஏனாமில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களின் வங்கிக் கணக்குகளில் விரைவில் தலா ரூ. 5 ஆயிரம் வரவு வைக்கப்படும் என அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தாா்.

ஏனாமில் உலக மீனவா் தின கோலப்போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் பரிசு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், ஏனாம் பிராந்திய நிா்வாக அதிகாரி சிவராஜ் மீனா, மீன்வளத் துறை அதிகாரி கொந்தையா, பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் பேசியதாவது:

அா்னாப் புயலால் பாதிக்கப்பட்ட ஏனாம் பிராந்தியத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம், 10 கிலோ அரிசி நிவாரணமாக வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை முதல்வா் ரங்கசாமி வெளியிடுவாா். இதையடுத்து, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நிவாரணத் தொகை விரைவில் செலுத்தப்படும்.

புயலால் அதிக அளவில் மழைநீா் புகுந்த சாவித்திரி நகா், கிரியம்பேட்டை பகுதிகளில் மத்திய அரசு அறிவிக்கும் நிவாரணத்தைப் பொறுத்து கூடுதல் நிதி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மீனவா்களின் வாழ்க்கைத் தரம், அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசின் உதவியுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.