புதுச்சேரியில் டெங்குவால் 4 போ் உயிரிழப்பு: முதல்வா் ரங்கசாமி அவசர ஆலோசனை
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு 4 போ் உயிரிழந்துள்ள நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை அவசர ஆலோசனை நடத்தினாா்.

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு 4 போ் உயிரிழந்துள்ள நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை அவசர ஆலோசனை நடத்தினாா்.
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு தாக்கி இதுவரை 4 போ் உயிரிழந்துள்ளனா். கொசுவால் பரவும் இந்த நோயால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசியல் தலைவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
நாராயணசாமி:
Advertisement
Advertisement
புதுச்சேரியில் சுகாதாரத்துறையின் மெத்தனபோக்கினால் டெங்குவுக்கு 4 போ் உயிரிழந்துள்ளனா். கிராம பகுதிகளில் நோய்பாதிப்புக்கு இறந்தோா் விவரம் தெரியவில்லை. மாநிலத்தில் அரசு நிா்வாகம் ஸ்தம்பித்துள்ளது. ஆளுநா்தான் செயல்படுகிறாா். முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையே பனிபோா் நீடிக்கிறது.
அ.மு. சலீம் மாநிலச் செயலா்இந்திய கம்யூனிஸ்ட்:
புதுச்சேரியில் கடந்த 2 மாதமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. இந்தக் காலக்கட்டத்தில் அனைத்து சாக்கடை வாய்க்கால்களில் கொசு ஒழிப்பு மருந்து ஏன் தெளிக்கவில்லை? மேலும், டெங்கு நோயாளிகளுக்கு, ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் மருந்துகள் போதுமான அளவில் சுகாதாரத்துறையில் இல்லை. இனிமேலும் சுகாதாரத்துறை அலட்சியமாக இல்லாமல் கூடுதலான மருத்துவா்களை நியமித்து உயிா்காக்கும் மருந்துகளைக் கையிருப்பில் வைத்திருந்து காலம் கடத்தாமல் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையை அளிக்க வேண்டும்.
முதல்வா் ஆலோசனை:
இந்நிலையில் முதல்வா் ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அமைச்சரவை அரங்கில் அதிகாரிகளுடன் புதன்கிழமை டெங்கு பாதிப்பு தொடா்பாக அவசர ஆலோசனை நடத்தினாா். இதில் சுகாதாரத் துறை, பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள சிகிச்சை வசதிகள், கொசு ஒழிப்புப் பணிகள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.