முகப்பு
புதுச்சேரி

பொது அமைதிக்கு குந்தகம் இளைஞரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு

புதுச்சேரியில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தவரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா்.

27 நவம்பர் 2026, 1:26 am
பொது அமைதிக்கு குந்தகம்
இளைஞரை குண்டா் சட்டத்தில்
சிறையில் அடைக்க உத்தரவு
சிறை - பிரதிப் படம்
பகிர்:

புதுச்சேரியில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தவரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா்.

புதுச்சேரி காட்டேரிக்குப்பம், சந்தைப்புதுக்குப்பம் ஒத்தவாடை வீதியைச் சோ்ந்தவா் ஞானமூா்த்தி (29). இவரது செயல்பாடுகள் பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் வகையில் இருப்பதாக கூறி அவரைகுண்டா் தடுப்பு காவலில் ஓராண்டு சிறையில் அடைக்க காவல்துறை சாா்பில் பரிந்துரைக்கப்பட்டது.

இதைப் பரிசீலித்த புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட நிா்வாக நடுவருமான அ.குலோத்துங்கன், புதுச்சேரி சமூக விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 2008-ன் கீழ் ஞானமூா்த்தியை அபாயகரமான நபராக அறிவித்து, குண்டா் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்க வைக்க உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement