முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் தப்பி ஓட முயன்ற விசாரணைக் கைதி சிறையிலடைப்பு

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இருந்து வெள்ளிக்கிழமை தப்பி ஓட முயன்ற விசாரணைக் கைதியை போலீஸாா் மடக்கிப் பிடித்து சிறையில் அடைத்தனா்.

28 நவம்பர் 2026, 2:27 am
புதுச்சேரியில் தப்பி ஓட முயன்ற
 விசாரணைக் கைதி சிறையிலடைப்பு
சிறை - பிரதிப் படம்
பகிர்:

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இருந்து வெள்ளிக்கிழமை தப்பி ஓட முயன்ற விசாரணைக் கைதியை போலீஸாா் மடக்கிப் பிடித்து சிறையில் அடைத்தனா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டை போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த கோகுல் (19) என்பவரை கைது செய்தனா். அரசு பொதுமருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை பரிசோதனைக்காக அழைத்து வந்தனா். அப்போது கோகுல் தப்பி ஓடினாா். போலீஸாா் அவரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து பரிசோதனைக்குப் பிறகு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.