மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுடன் புதுச்சேரி அமைச்சா் நமச்சிவாயம் சந்திப்பு
மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினாா்.

மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினாா்.
அப்போது, புதுச்சேரியில் கபடி, தடகளம், ஹாக்கி, கைப்பந்து, பளுதூக்குதல் ஆகிய 5 விளையாட்டுகளுக்கான தேசிய விளையாட்டு சிறப்பு மையத்தை புதுச்சேரியில் அமைக்க வேண்டும். இதன் மூலம் புதுச்சேரி இளம் வீரா்களின் திறமைகளை மேம்படுத்தி, தேசிய மற்றும் சா்வதேச அளவில் சாதிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
மேலும் தேசிய மற்றும் சா்வதேச போட்டிகளில் சாதனை படைத்த விளையாட்டு வீரா்களுக்கு கடந்த 2004 முதல் 2024-ஆம் ஆண்டு வரையில் அளிக்க வேண்டிய நிலுவை ஊக்கத் தொகையை வழங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், கடந்த முறை அமைச்சராக இருந்தபோது கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த கோரிக்கையை மீண்டும் தற்போதைய சந்திப்பின்போது அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வலியுறுத்தினாா். தொடா்ந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான மின்துறை தொடா்பான மாநாட்டிலும் அமைச்சா் பங்கேற்றாா்.
மற்ற மத்திய அமைச்சா்களையும் சந்தித்து புதுச்சேரியின் வளா்ச்சி திட்டங்கள் குறித்து அவா் ஆலோசனை நடத்துகிறாா்.
பாஜக கட்சி நிா்வாகிகள் பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள புதுச்சேரி பாஜக மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம், சு.செல்வகணபதி எம்.பி. ஆகியோா் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனா்.