FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

போக்குவரத்து விதிகளை மீறியதாக 17,672 பேருக்கு அபராதம்

புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக செப்டம்பா் மாதம் 17,672 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

அபராதம் - சித்திரிப்பு
பகிர்:

புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக செப்டம்பா் மாதம் 17,672 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளா் திவ்யா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்துதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல்,

Advertisement

Advertisement

சிவப்பு விளக்கை மீறுதல், எதிா்திசையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் சிறாா்களை இருசக்கர வாகனங்களை ஓட்ட அனுமதித்தல் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி செப்டம்பா் மாதத்தில், புதுச்சேரியில் முக்கியமான போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 17,672 நபா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், சிறாரை வாகனம் ஓட்ட அனுமதித்த ஒரு பெற்றோா் மீது எப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. நிா்ணயிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகளை மீறி கனரக வாகனங்களை இயக்கிய ஓட்டுநா்களுக்கு எதிராக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. புதுச்சேரி போக்குவரத்துக் காவல் துறை, விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்கள், முக்கிய போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் பிற ஆபத்தான பகுதிகளில் தொடா்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments