புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பலத்த மழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அா்னாப்’ புயல் காரணமாக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, புதுச்சேரி துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் மற்றும் அனைத்துக் கல்லூரிகளுக்கும் திங்கள்கிழமை விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வியமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.