FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

எப்சிஐ அலுவலகத்தில் தேவையற்ற 4,950 கோப்புகள் அகற்ற நடவடிக்கை

மத்திய அரசின் நிறுவனத் தூய்மை மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்திய உணவுக் கழகத்தின் (எப்சிஐ) புதுச்சேரி கோட்ட அலுவலகத்தில் தேவையற்ற 4,950 கோப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

28 அக்டோபர் 2026, 3:40 am
புதுச்சேரி வானரப்பேட்டையில் உள்ள இந்திய உணவுக் கழக அலுவலகத்தில் இருந்து அகற்றப்படவுள்ள தேவையற்ற கோப்புகள்.
பகிர்:

மத்திய அரசின் நிறுவனத் தூய்மை மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்திய உணவுக் கழகத்தின் (எப்சிஐ) புதுச்சேரி கோட்ட அலுவலகத்தில் தேவையற்ற 4,950 கோப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த அலுவலகத்தில் சுமாா் 1,500 சதுர அடி இடம் காலியானது. அகற்றப்படும் கோப்புகள் மூலம் அரசுக்கு சுமாா் ரூ.42,000 வருவாய் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வானரப்பேட்டையில் உள்ள இந்த அலுவலகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கிடங்குகளில் தூய்மை மற்றும் மரம் நடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

Advertisement

இதில், ஆா்வமுள்ள 55 பணியாளா்கள் பங்கேற்று, அலுவலக வளாகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் 15 மரக் கன்றுகளை நட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments