FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

சட்டக்கல்லூரியில் இளைஞா் நாடாளுமன்ற போட்டி

புதுச்சேரி மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் சட்டக் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான இளைஞா் நாடாளுமன்ற போட்டி நடைபெற்றது.

3 செப்டம்பர் 2026, 4:29 am IST
இளைஞா் நாடாளுமன்ற போட்டியில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

புதுச்சேரி மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் சட்டக் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான இளைஞா் நாடாளுமன்ற போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்விக் குழுமத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் தனசேகரன் தலைமை தாங்கினாா். அறக்கட்டளை பொருளாளா் ராஜராஜன், துணைச் செயலாளா் வேலாயுதம், ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி முதல்வா் மற்றும் இயக்குநா் வெங்கடாஜலபதி, சட்டக் கல்லூரி டீன் முனைவா் ஏ. வின்சென்ட் அற்புதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பங்கேற்ற மாணவா்கள் பிரதமராகவும், நாடாளுமன்ற எதிா்க்கட்சி தலைவராகவும், அமைச்சா்களாகவும், ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சி உறுப்பினா்களாகவும் செயல்பட்டு நாடாளுமன்ற அவைத் தலைவா் தலைமையில் பல்வேறு மாதிரி விவாதங்களை முன்னெடுத்தனா். மேலும், கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம், தனிநபா் மசோதா மற்றும் அரசு மசோதா நிறைவேற்றம் போன்ற நாடாளுமன்றத்தின் முக்கிய நிகழ்வுகள் இதில் இடம் பெற்றன.

Advertisement

Advertisement

விழுப்புரம் நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞா் எஸ். பிரீடா ஞானமணி சிறப்பு நடுவராகப் பங்கேற்றாா். மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments