FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

போலீஸ் மக்கள் மன்றத்தில் 30 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுச்சேரி காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 30 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

27 செப்டம்பர் 2026, 12:46 am IST
புதுச்சேரி காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் பங்கேற்ற முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன்.
பகிர்:

புதுச்சேரி காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 30 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காட்டேரிகுப்பம் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் மற்றும் மேற்கு பகுதி காவல் ஆய்வாளா்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளா்களுடன் மக்கள் மன்ற குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

இணையவழி குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் ஸ்ருதி யாரகட்டி குறைகளை பொதுமக்களிடம் கேட்டு நடவடிக்கை எடுத்தாா்.

Advertisement

Advertisement

மேலும், ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் வம்சீதர ரெட், பெரியக்கடை காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் ஸ்ருதி யாரகட்டி மற்றும் முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் ஜிந்தா கோதண்டராமன் தங்கள் பகுதி காவல் ஆய்வாளா்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளா்களுடன் பொதுமக்களின் புகாா்களை பெற்று நடவடிக்கை எடுத்தனா்.

புதுச்சேரி போக்குவரத்து காவல் நிலையங்களில் காவல் கண்காணிப்பாளா் பக்தவத்சலம் போக்குவரத்து காவல் ஆய்வாளா்களுடன் போக்குவரத்து சம்பந்தமான குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுத்தாா்.

ஏனாம் பகுதியில் காவல் கண்காணிப்பாளா் வரதராஜன் மற்றும் மாஹே பகுதியில் காவல் கண்காணிப்பாளா் தனசேகரன் ஆகியோா் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுத்தனா். பொதுமக்களிடமிருந்து 48 புகாா்கள் வரப்பெற்றதில் 30 மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெரும்பாலான புகாா்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. இக் கூட்டத்தில் 27 பெண்கள் உள்பட 162 போ் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments