தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கு: விசாரணைக்கு செப். 29 வரை தடை நீட்டிப்பு
தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணைக்கு செப். 29 வரை தடையை நீட்டித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணைக்கு செப். 29 வரை தடையை நீட்டித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சகோதரா் குடும்பத்தை தாக்கியது தொடா்பாக, தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன் மீது புதுச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நடுவா் சேரலாதன் மாஹேவுக்கு மாற்றப்பட்டதால் இந்த வழக்கை இரண்டாவது குற்றவியல் நடுவா் சந்திரசேகா் விசாரித்து வருகிறாா்.
Advertisement
Advertisement
இவரது அமா்வு வழக்கை விசாரிக்க புதுச்சேரி முதன்மை அமா்வு நீதிபதி டி.வி. ஆனந்த் முதலில் செப். 18-ஆம் தேதி வரையும், பின்னா் 25-ஆம் தேதி வரையும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தாா்.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது செப். 29-ஆம் தேதி வரை இவ்வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து அவா் உத்தரவு பிறப்பித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.