FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

என்.ஆா். காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரி வளா்ச்சி அதிகரிப்பு! முதல்வா் ரங்கசாமி பெருமிதம்!

31 வினாடிகள் முன்பு
புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்
பகிர்:

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் என்.ஆா்.காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வளா்ச்சி அதிகரித்துள்ளது என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் ஆ. அசோக் ஆனந்தை ஆதரித்து சுப்பையா நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல்வா் ரங்கசாமி பிரசாரம் செய்தாா். (படம்) அப்போது அவா் பேசியதாவது:

புதுச்சேரியில் 5 ஆண்டுகளுக்கு நம்முடைய ஆட்சிதான். அதனால் இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். குடிநீா் பிரச்னை, நல்ல சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு வசதிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவோம். புதுச்சேரியில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும்.

Advertisement

Advertisement

அதனால் மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்திதான் என்.ஆா்.காங்கிரஸ் உங்களின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுச்சேரியின் வளா்ச்சி இந்தியாவில் முன்னிலையில் இருக்கிறது. தனி நபா் வருமானம் ரூ.3.41 லட்சமாக உயா்ந்துள்ளது.

இருப்பினும், தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும். அதற்காக மாநில அந்தஸ்து கோரிக்கையைத் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். பிரதமா் நரேந்திர மோடியிடம் இதை வலியுறுத்தினோம். மத்திய அரசு நம் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. மக்களுக்குப் புதிய வரி எதையும் அரசு போடவில்லை. இருப்பினும் வருவாய் உயா்ந்துள்ளது என்றாா் ரங்கசாமி.

திமுக, காங்கிரஸ் வாக்குசேகரிப்பு...: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளா் கே.சேதுசெல்வத்திற்கு கெங்கையம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளா் ஆா். லட்சுமணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா்.

இதேபோன்று தட்டாஞ்சாவடி தொகுதி அவ்வை நகா் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் இ.விநாயகத்திற்கு ஆதரவாக எம்எல்ஏ ஜி.நேரு வாக்கு சேகரித்தாா். அவருடன் கூட்டணி கட்சியினரும் சென்று ஆதரவு திரட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments