கொள்ளையடிக்கத் திட்டம்: இருவர் கைது
விழுப்புரம் பகுதியில் கொள்ளையடிப்பதற்கு சதித் திட்டம் தீட்டியதாக வியாழக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் பகுதியில் கொள்ளையடிப்பதற்கு சதித் திட்டம் தீட்டியதாக வியாழக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் பழனி தலைமையிலான போலீஸார் ஜானகிபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மரத்தடியில் 5 பேர் அமர்ந்திருந்தனர்.
அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்த முயன்றபோது, 3 பேர் தப்பியோடிவிட்டனர். எஞ்சிய இருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்ததில் அவர்கள் வேலியம்பாக்கம் ராமதாஸ் (28), கண்டம்பாக்கம் சிலம்பரசன் (22) எனத் தெரியவந்தது.
Advertisement
Advertisement
மேலும், 5 பேரும் இணைந்து விழுப்புரம் பகுதியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்ததாம். இதையடுத்து போலீஸார் ராமதாஸ் உள்பட இருவரையும் கைது செய்தனர். தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.