தமிழ்ச் சங்க பட்டிமன்றம்
மணலூர்பேட்டை தமிழ்ச் சங்கம் சார்பில், "எதற்கும் ஏற்ற வாழ்க்கை கிராமப்புறத்திலா, நகர்ப்புறத்திலா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் அண்மையில் காங்கியனூரில் நடைபெற்றது.
மணலூர்பேட்டை தமிழ்ச் சங்கம் சார்பில், "எதற்கும் ஏற்ற வாழ்க்கை கிராமப்புறத்திலா, நகர்ப்புறத்திலா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் அண்மையில் காங்கியனூரில் நடைபெற்றது.
அரங்க.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். கிராமப்புறத்திலே எனும் தலைப்பில் சு.ஜனசக்தி, ச.தமிழரசி, ஏ.செல்வக்குமார், நகர்ப்புறத்திலே எனும் தலைப்பில் நல்லாசிரியர் சுந்தர.அருணகிரி, அரங்க.மின்னல், தி.க.நாகராஜன் ஆகியோர் பேசினர்.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்ற சுந்தர.அருணகிரி, ஆசிரியர் செம்மல் விருதுபெற்ற முனைவர் தி.க.நாகராஜன் ஆகியோருக்கு தமிழ்ச் சங்கம் சார்பில் பைந்தமிழ்ச் செம்மல் விருதுகள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் தா.சம்பத் தலைமை வகித்தார். கிராம முக்கியஸ்தர்கள் கண்ணன், ராஜ் முன்னிலை வகித்தனர். நூலக வாசகர் வட்டத் தலைவர் சி.சக்கரவர்த்தி வரவேற்றார்.
தியாகதுருகம் தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.ராதாகிருஷ்ணன், நிர்வாகி தி.க.சண்முகம் வாழ்த்துரை வழங்கினர். ரஞ்சித், சரவணன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.