FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வாக்குச் சாவடி முகவர் பட்டியல்: ஆட்சியர் அறிவுறுத்தல்

வாக்குச் சாவடி முகவர்கள் பட்டியலை விரைவில் அளிக்க அளிக்க வேண்டும் என அரசியல் கட்சியினரை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

வாக்குச் சாவடி முகவர்கள் பட்டியலை விரைவில் அளிக்க அளிக்க வேண்டும் என அரசியல் கட்சியினரை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் தொடர்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எம்.லட்சுமி தலைமை தாங்கினார்.

இக் கூட்டத்தில் கட்சிப் பிரமுகர்களிடம் தொகுதி வாரியாக வாக்குச் சாவடி முகவர்கள் பட்டியலை விரைவில் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் ஆட்சியர் கூறியது:

Advertisement

Advertisement

அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட அனைத்து வகை நிகழ்வுகளுக்காக பொது இடங்களில் விளம்பர பேனர்கள் வைப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட துறையில் ஆட்சேபனையின்மை சான்று பெற வேண்டும். சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்ற பின்பே பதாகைகள் வைக்க வேண்டும்.

இந்த பதாகைகளில் அனுமதி எண், நாள், காலம் ஆகிய விவரங்கள் மற்றும் பிரிண்டர் குறித்த விவரமும் இடம் பெற வேண்டும். அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்தவுடன்  பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும். அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இது தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பிருந்தாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கு.கார்த்திகேயன், அலுவலக மேலாளர் (குற்றவியல்) எஸ்.சிவபிரபாநாதன், தேர்தல் தனி வட்டாட்சியர் ஏ.ஆர்.சையத்மொஹமூத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments