3 பெண்கள் கொலை: இளைஞர் கைது
திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் 3 பெண்களை பலாத்காரம் செய்து கொன்றதாக இளைஞரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் 3 பெண்களை பலாத்காரம் செய்து கொன்றதாக இளைஞரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராமானுஜம் மனைவி கலா (40). இவர் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வயல்வெளியில் இறந்து கிடந்தார். இவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் கொல்லப்பட்ட கலாவின் செல்லிடப்பேசியில், அவரது சிம்கார்டுக்குப் பதிலாக மற்றொரு சிம்கார்டு பயன்படுத்தி மர்ம நபர் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அவர் மேட்டுக்குப்பம் கணேசன் மகன் மணிகண்டன் (25) எனத் தெரியவந்தது. அவரிடம் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தனர்.
இதில் மணிகண்டன் மதுபோதையில் பெண்களை பலாத்காரம் செய்து கொல்வதை வாடிக்கையாக கொண்டவர் என தெரியவந்ததாம். இதேபோல் கலாவைக் கொன்றதாகவும், மேலும், அதே ஊரைச் சேர்ந்த முத்துசாமி மனைவி ஞானம்பாள் (40), பாவந்தூர் ஏழுமலை மனைவி சாந்தா (60) ஆகியோரையும் பலாத்காரம் செய்து கொன்றதையும் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து மணிகண்டனை போலீஸார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.