கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை
கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் முதல் முறையாக மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் முதல் முறையாக மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
உளுந்தூர்பேட்டை வட்டம், சாலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (58). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கீழே தவறி விழுந்ததில் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தவரை மருத்துவர்கள் பரிசோதித்துள்ளார்.
அவருக்கு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்ட இணை இயக்குநர் கே.ஜோதி தலைமையில் மருத்துவர்கள் மோகன்ராஜ், கமலசேகரன், மயக்கவியல் நிபுணர் அருண், செவிலியர் கவிதா, உதவியாளர் பிச்சப்பிள்ளை கொண்ட மருத்துவக் குழுவினர் முதன் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றினர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.