FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆசிரியர்களுக்கு ஊதியம்: எம்எல்ஏ வழங்கினார்

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தனியாக நியமிக்கப்பட்ட பிளஸ் 2 பாட ஆசிரியர்கள் 3 பேருக்கான மாத ஊதியத்தை அ.பிரபு எம்எல்ஏ தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தனியாக நியமிக்கப்பட்ட பிளஸ் 2 பாட ஆசிரியர்கள் 3 பேருக்கான மாத ஊதியத்தை அ.பிரபு எம்எல்ஏ தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
 கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் எம்எல்ஏ அ.பிரபு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், பள்ளியில் பிளஸ் 2 மாணவிகளுக்கு பயிற்றுவிப்பதற்காக ஆசிரியர் பற்றாக்குறை இருந்த நிலையில், தனியாக நியமிக்கப்பட்ட 3 ஆசிரியர்களுக்கான முதல் மாத ஊதியமாக தனது சொந்த செலவில் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.15 ஆயிரத்தை தலைமை ஆசிரியரிடம் எம்எல்ஏ வழங்கினார்.
 மேலும், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவிலும் அ.பிரபு எம்எல்ஏ தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், சாரண மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு சீருடை தைப்பதற்கு அவரது சொந்த நிதியிலிருந்து ரூ.15ஆயிரத்தை தலைமை ஆசிரியரிடம் அ.பிரபு காசோலையாக வழங்கினார்.
 நிகழ்ச்சிகளில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ராமச்சந்திரன், மார்கரெட், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கோமுகி மணியன், மாநில கபடி கழகத் தலைவர் கே.பி.பாண்டியன் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments