தமிழ்த் துறை மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு
கள்ளக்குறிச்சி அரசுக் கல்லூரியில் தமிழ்த் துறையில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் அமர்வதற்கு இருக்கை இல்லாததால், புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
கள்ளக்குறிச்சி அரசுக் கல்லூரியில் தமிழ்த் துறையில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் அமர்வதற்கு இருக்கை இல்லாததால், புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த சிருவங்கூர் கிராம எல்லையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் அரசுக் கலை - அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.
இந்தக் கல்லூரியில் காலை நேரத்தில் அறிவியல் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், பிற்பகல் வேளையில் கலைப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இரு பிரிவுகளாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பிற்பகல் நேரத்தில் நடைபெறும் தமிழ்த் துறையில் முதலாம் ஆண்டு பயிலும் 84 மாணவர்களுக்கு இருக்கை இல்லாமல் தரையில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனராம்.
இதுதொடர்பாக, மாணவர்கள் கல்லூரி முதல்வர் முத்துசாமியிடம் முறையிட்டனர். அவர், புதிய இருக்கைகளுக்கு ஏற்பாடு செய்து வருவதாகக் கூறி வந்தாராம். ஆனால், இரண்டு மாதங்கள் ஆகியும் இருக்கைகள் வரவில்லையாம்.
இதனால், தமிழ்த் துறை மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணிப்பு வெளியில் நின்றனர். இதையடுத்து தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தி வகுப்பறையில் அமர வைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.