FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஓய்வூதியர் தின விழா கருத்தரங்கம்

மத்திய, மாநில அரசு பொதுத் துறை ஓய்வூதியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஓய்வூதியர் தின விழா கருத்தரங்கம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

மத்திய, மாநில அரசு பொதுத் துறை ஓய்வூதியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஓய்வூதியர் தின விழா கருத்தரங்கம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு மாவட்டத் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் மதியழகன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர் நல அமைப்பின் விழுப்புரம் கிளை பொருளாளர் சேஷையன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் புருசோத்தமன், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செலாளர் அய்யாகண்ணு, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க முன்னாள் மாநிலப் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஒருங்கிணைப்புக் குழுச் செயலாளர் மேகநாதன், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் முத்துக்குமரன், தென்னிந்திய ரயில்வே ஓய்வூதியர் சங்க செயலாளர் பாஸ்கரன், அஞ்சல்துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகி ராஜேந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்பழகன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பு மாநிலத் துணைச் செயலாளர் சகாதேவன் ஆகியோர்சிறப்புரையாற்றினர்.
ஓய்வூதியத்தை வருமானவரிச் சட்டத்தின் கீழ் இணைக்கக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை போக்குவரத்துத் துறைக்கும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஓய்வூதிய கூட்டமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் கமலா நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments