பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
கோட்டக்குப்பத்தில் நீர்நிலைகளை சீரமைக்க வலியுறுத்தி, பாஜக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்டக்குப்பத்தில் நீர்நிலைகளை சீரமைக்க வலியுறுத்தி, பாஜக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் விநாயகம் தலைமை வகித்தார். ஓபிசி பிரிவு மாநில துணைச் செயலர் பார்த்திபன், தமிழ் வளர்ச்சித் துறை மாநில துணைச் செயலர் சரோத்தமன், தொகுதி பொறுப்பாளர் ஆதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏக்கள் கலிவரதன், தர்மபுரி பாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கோட்டக்குப்பம் பகுதியில் மழைக்காலத்துக்கு முன்னதாகவே ஏரி, குளங்களை சீரமைக்க வேண்டும். ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள 38 குளங்களை சீரமைக்க வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் வெளிமாநில குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும், கொசு ஒழிப்பை மேற்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
மாவட்ட நிர்வாகிகள் முரளி, கோதண்டபாணி, ஒன்றியச் செயலர் தங்க.சிவக்குமார், நகரச் செயலர் சரவணன், ஊடகப் பிரிவுச் செயலர் சுரேஷ், ஒன்றியத் தலைவர்கள் கார்த்தி, முருகன், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.