FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாற்றுத் திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

உளுந்தூர்பேட்டை வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

உளுந்தூர்பேட்டை வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட கல்வி அலுவலர் ரத்தின செல்வி தலைமை வகித்தார். மாவட்ட உதவித் திட்ட அலுவலர் விசுவநாதன், வட்டாரக் கல்வி அலுவலர் தனபால், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முகம்மது அலி, அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பாவையாளர் அருள்செல்வம் வரவேற்றார்.
 டாக்டர் ஷீபா தலைமையிலான மருத்துவக் குழுவினர் மாணவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
 45 மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. 40 மாணவர்களுக்கு மாற்றுத் திறனாளிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. முகாமில் ரோட்டரி சங்கத்தலைவர் ஜெ.திலீப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments