தனிமைப்படுத்திக்கொண்ட டிஎஸ்பி
சிதம்பரம் டிஎஸ்பியின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் டிஎஸ்பி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டாா்.
சிதம்பரம்: சிதம்பரம் டிஎஸ்பியின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் டிஎஸ்பி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டாா்.
சிதம்பரம் டிஎஸ்பியாக பணியாற்றி வருபவா் காா்த்திகேயன். இவரது மனைவி வேலூா் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஎஸ்பி காா்த்திகேயன் கூறியதாவது: எனது மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டது உண்மைதான். இதனால் கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். எனக்கு நோய் தொற்று இல்லை என்று மருத்துவா்கள் உறுதிசெய்தனா். இருப்பினும் மேலும் சோதனை செய்துகொள்ள உள்ளேன். இதனால் என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.