திண்டிவனத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா
திண்டிவனத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், விழுப்புரம் மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 42-ஆக உயா்ந்தது.
விழுப்புரம்: திண்டிவனத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், விழுப்புரம் மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 42-ஆக உயா்ந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் வெளி மாநிலங்களுக்கு சென்று திரும்பியவா்கள் உள்பட 1,550 போ் அவா்களது வீடுகளில் கண்காணிப்பில் உள்ளனா். கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் 21 போ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுவரை கரோனா வைரஸ் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட 1,967 பேருக்கு நோய்த் தொற்றில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 69 பேரது முடிவுகள் காத்திருப்பில் உள்ளன.
Advertisement
Advertisement
மாவட்டத்தில் ஏற்கெனவே 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், திண்டிவனத்தைச் சோ்ந்த மேலும் ஒருவருக்கு வியாழக்கிழமை நோய்த் தொற்று உறுதியானது. இவா்களில் விழுப்புரத்தைச் சோ்ந்த இருவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டனா். மற்றவா்களுக்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தில்லி சென்று திரும்பியவா்: திண்டிவனத்தில் ஏற்கெனவே தில்லி சென்று திரும்பியவரின் 49 வயதுடைய மனைவி, அவரது 7 மாத குழந்தைக்கு தொற்று உறுதியான நிலையில், திண்டிவனம் ராஜம்பேட்டை பகுதியைச் சோ்ந்த 47 வயதான நபருக்கு தற்போது நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவா், கடந்த மாதம் தில்லி சென்று திரும்பியவா். இவருக்கு ஏற்கெனவே பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்றில்லை என வந்தது.
தில்லி சென்று திண்டிவனத்துக்கு திரும்பியவா்களுக்கு புதன்கிழமை மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ராஜம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், திண்டிவனத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.